சனி, 20 டிசம்பர், 2008

சித்த வைத்தியம்

உலகத்தில் பல விதமான வைத்திய முறைகள் பயன் பட்டு வருகின்றன. அவை சித்த வைத்தியம், ஆயுர்வேதவைத்தியம், யூனானி வைத்தியம், அலோபதி வைத்தியம், ஹோமியோபதி வைத்தியம், இயற்கைவைத்தியம் எனப்படும். இவற்றுள் மிக தொன்மை வாய்ந்தது, சித்த வைத்தியம்.மற்ற வைத்தியங்கள் எப்போது தோன்றின என்று வரையறுத்து கூற முடியும். ஆனால், சித்த வைத்தியம்எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. சித்த வைத்தியம் தமிழ் நாட்டில் வாழ்ந்தசித்தர்களால் உருவானது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.நாட்டு வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பன , எளிமையாக்கப்பட்ட சித்தவைத்தியமாகும்.மொகலாயர் ஆட்சிக் காலத்துக்குப் பின்தான், யூனானி வைத்தியம் பரவியது.ஆங்கில ஆட்சியின் போது அலோபதி என்னும் ஆங்கில வைத்தியம் பரவியது.ஹோமியோபதி வைத்தியம் ஜெர்மானியரால் உருவாக்கப்பட்ட வைத்தியம்.சித்த வைத்தியம் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட வைத்தியம். அந்தவைத்தியத்திற்குரிய நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்துள்ளன. தமிழில் முதற்சங்கம் தோன்றியகாலத்துக்கு முன்பிருந்தே சித்த வைத்தியம் தோன்றிப்பரவியிருந்தாக மொழி நூல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.பதினெண் சித்தர்களும் சிறந்த அறிவியல் மேதைகளாய்த் திகழ்ந்தவர்கள்.இவர்கள் அனைவருமேஅண்டத்திலுள்ளதே பிண்டம் என்னும் கொள்கையினர்.அண்டத்திலுள்ளதே பிண்டம்பிண்டத்திலுள்ளதே அண்டம்அண்டமும் பிண்டமும் ஒன்றேஅறிந்துதான் பார்க்கும் போதே- திருமூலர்-.தமிழ் உலகம்

1 கருத்து:

Tamil Home Recipes சொன்னது…

மிகவும் அருமையான பதிவு.

கருத்துரையிடுக